தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்காரர்களின் இயல்பு இவை!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்காரர்களின் இயல்பு இவை!

மேஷம்

முன் கோபம் கொண்ட நீங்கள் எதிலும் பொறுமையை இழப்பீர்கள். அவசர புத்தியால் எதையும் யோசித்து செய்யமாட்டீர்கள். இதனால் பிரச்சனை உங்களை சுத்துப்போட்டு கொண்டே இருக்கும்.

ரிஷபம்

சோம்பல் குணத்தால் எந்த ஒரு செயலையும் விரைவாகச் செய்யமாட்டீர்கள். இதனால் பல செயல்களை செய்ய முடியாமல் நேரம் கடந்த பின்னர் வருந்துவீர்கள்.

மிதுனம்

ஒரு செயலை செய்யும் பொழுது வேறு ஒரு சிந்தனை உங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த கவனச் சிதறலால் பல கஷ்டங்களை சந்திப்பீர்கள்.

கடகம்

தான் சொல்வது மட்டுமே சரியானது என்று கருதும் குணம் கொண்டவர்கள். பிறர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

சிம்மம்

அதிகம் பேசக் கூடிய நபர்கள் நீங்கள்.. எந்த ஒரு ரகசியத்தையும் காக்க மாட்டீர்கள்.

கன்னி

பிறரின் குறைகளை சொல்லி காட்டும் குணம் கொண்ட நீங்கள்.. உங்களுடைய தவறை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்.

துலாம்

முன் கோபம் கொண்ட நீங்கள்.. பிறர் சொல்வதை கேட்க மாட்டீர்கள். தான் எடுக்கும் முடிவே சரியானது என்று நினைப்பவர்கள்.

விருச்சிகம்

தனக்கு துன்பம் என்றாலும் அதை பிறரிடம் சொல்ல மாட்டீர்கள். அனைத்து விஷயங்களிலும் ரகசியம் காப்பீர்கள்.

தனுசு

இவர்களிடம் எந்த ஒரு ரகசியத்தையும் பகிரக் கூடாது. இவர்கள் ரகசியம் காக்க தவறுபவர்கள்.

மகரம்

சுயநலம் கொண்ட நீங்கள் அதிகாரம் செய்ய விரும்புவீர்கள். தான் நினைப்பது மட்டுமே நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்.

கும்பம்

ஒரு மனநிலையில் இருக்க மாட்டார்கள். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

மீனம்

மன தைரியம் அற்றவர்கள். பொறுப்பற்ற குணம் கொண்டவர்கள். எந்த ஒரு செயலையும் செய்ய அஞ்சுபவர்கள்.