தெரிந்து கொள்ளுங்கள்.. மற்றவரிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் இவை!
1)நாம் செய்யும் தான தர்மங்களை யாரிடமும் சொல்லக் கூடாது.
2)நாம் கடவுளிடம் வைக்கும் வேண்டுதலை அவை நிறைவேறும் வரை ஒருபோதும் வெளியில் சொல்லக் கூடாது.
3)வீடு வாங்கி முடிக்கும் வரை யாரிடமும் நீங்கள் வீடு வாங்கப் போகிறீர்கள், அதற்கு இவ்வளவு செலவு என்று எதையும் சொல்லக் கூடாது.
4)நம் எதிர்கால திட்டங்களை ஒருபோதும் யாரிடமும் சொல்லக் கூடாது. இதனால் நம் திட்டங்கள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு இருக்கிறது.
5)தாய்மை அடைந்து மூன்று மாதங்கள் முடியும் வரை சொல்லக் கூடாது.
6)குடும்பத்தின் வரவு செலவு கணக்கை வெளிநபரிடம் சொல்லவே கூடாது.
7)தங்க நகை வாங்கி முடிக்கும் வரை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது.
8)வீட்டில் புதிய பொருட்கள் வாங்கினால் வாங்கி முடிக்கும் வரை அதை பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது.
9)மளிகைப் பொருட்கள் வாங்கும் அளவை யாரிடமும் சொல்லக் கூடாது.
10)கணவன், மனைவி அன்யோன்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லக் கூடாது.
11)குடும்ப விஷயங்களை வெளி நபரிடம் பகிரக் கூடாது.
12)வீட்டில் எவ்வளவு செல்வம், பணம் உள்ளது என்பது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது.