தெரிந்து கொள்ளுங்கள்.. வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை..!!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை..!!

வாரத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான ஒரு திருநாளாகும். வாரத்தில் எந்த நாளில் வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும் வெள்ளிக்கிழமையில் அவசியம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

மங்களகரமான வெள்ளிக்கிழமை நாளில் எவையெல்லாம் செய்யலாம் என்பது குறித்த தெளிவான விளக்கம் இதோ.

பொதுவாக வெள்ளிக்கிழமை நாளில் கல் உப்பு வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
அதேபோல் தயிர், அரிசி, நல்லெண்ணெய் வாங்கினாலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று அரிசியை வறுக்கவோ, புடைக்கோ கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் காலை அல்லது மாலை நேரத்தில் மகாலட்சுமிக்கு மொச்சை அல்லது பச்சை பயறில் சுண்டல் செய்து நைவேத்தியம் படைத்து வழிபட்டால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.

வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள தாயாருக்கு அபிஷேகம் செய்ய இல்லத்தில் சுபிட்சம் நிலைத்து இருக்கும். அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம். இவ்வாறு செய்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமையில் மாத்திரை, மருந்துகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த கிழமையில் மருந்து பொருட்களை வாங்கினால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உருவாகும். வெள்ளிக்கிழமை நாளில் பெண்கள் வீட்டில் அழக்கூடாது. அழுகை சத்தம் அன்றைய நாளில் குடும்பத்திற்கு நல்லது கிடையாது.