Kanavu Palangal in Tamil : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

Photo of author

By Divya

Kanavu Palangal in Tamil : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

**இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும். மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள்.

**இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவது போன்று கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.

**இறந்து போனவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி செல்வது போல் கனவு வந்தால் நம்மை உண்டு.

**இறந்தவர்கள் கனவில் வந்து ஆசிர்வதிப்பது போல் கனவு கண்டால் எல்லா விதமான நன்மைகளும் ஏற்படும் என்று அர்த்தம்.

**இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால் நல்லதல்ல. கோயிலில் அர்ச்சனை செய்வது நல்லது.

**இறந்தவர்கள் கனவில் வந்தால் அதாவது இறந்த அப்பா கனவில் வந்தால் உங்களால் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையை விரைவில் முடிப்பீர்கள் என்று பொருள்.

**இறந்து போன உங்கள் தாய் கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.

**நமக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது இறந்து விட்டது போல் கனவு கண்டால் அவர்களது துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம்.

**இறந்தவர்களின் சடலங்களை தங்கள் கனவில் கண்டால் தங்கள் வீட்டில் எதாவது சுபநிகழ்ச்சிகள் நடைபெறப்போகிறது என்று அர்த்தமாகும்.

**இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போன்று கனவு வந்தால் இக்கட்டான சூழலில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.