பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணம் மற்றும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!!
1)ஞாயிற்றுக் கிழமை
இந்த கிழமையில் பிறந்த நபர்கள் கடின வேலையை எளிதாக, திறமையாக முடித்து சாதனை படைபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகம். இவர் தலைமையில் பலர் வேலை செய்வார்கள்.
2)திங்கள்
இந்த கிழமையில் பிறந்த நபர்கள் சாந்த குணம் உடையவராக இருப்பார்கள். தர்ம நியாயங்களை கடைபிடிப்பவர்கள் இவர்களுக்கு சொந்த தொழில் கை கொடுக்கும்.
3)செவ்வாய் கிழமை
இந்த கிழமையில் பிறந்த நபர்களுக்கு சுய சிந்தனை கிடையாது. மற்றவர்களிடம் யோசனை கேட்பார். பேச்சு திறமையில் வல்லவர்.
4)புதன் கிழமை
இந்த கிழமையில் பிறந்த நபர்களுக்கு புத்தி கூர்மை உண்டு. கல்வியில் ஆர்வம். மற்றவர்கள் மனதில் உள்ளதை துல்லியமாக அறிய முடியும். உயர்ந்த நிலையில் வாழ்வார்கள்.
5)வியாழக் கிழமை
இந்த கிழமையில் பிறந்த நபர்கள் நீதி, தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள். குறுக்கு வழியில் செல்ல நினைக்க மாட்டார்கள். உறவினர்களை மிகவும் நம்புவார்கள். எந்த துறையிலும் முன்னேற்றம் அடைவார்கள்.
6)வெள்ளிக்கிழமை
இந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த வேலையிலும் சிரமம் இல்லாமல் செயல்படுவார்கள். பேச்சாற்றல் கொண்டவர்கள். பேச்சிலே தன் வசப்படுத்தி கொள்வார்கள்.
7)சனிக்கிழமை
இந்த கிழமையில் பிறந்தவர்கள் பொறுமை சாலிகளாக இருப்பார்கள். கடவுள், பக்தி அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கடின வேலைகளையும் எளிதாக கையாள்வார்கள்.