தெரிந்த பொருட்கள் தெரியாத மருத்துவ பயன்கள்! நச்சுன்னு நாலு டிப்ஸ்! 

Photo of author

By Amutha

தெரிந்த பொருட்கள் தெரியாத மருத்துவ பயன்கள்! நச்சுன்னு நாலு டிப்ஸ்! 

நமது முன்னோர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள். அதனால் அப்போது 100 வயது வரை ஆயுள் என்பது சாதாரண ஒன்று. காலை முதல் மாலை வரை உடலுக்கு நிறைய வேலை இருந்தது. உணவு முறைகளும் எளிமையான ஒன்றாக இருந்தது. அதுவே அவர்களுக்கு மருந்தாகவும் பயன்பட்டது.

ஆனால் நாம் தற்போது முன்னேற்றம் என்ற பெயரில் உடலுக்கு வேலை இல்லாமல் கண்ட கண்ட உணவு வகைகளை சாப்பிட்டு ஏராளமான வியாதிகளை கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

சில சாதாரண பிரச்சனைகள் தீர நமது முன்னோர்கள் பயன்படுத்திய சில எளிய வைத்திய முறைகளை பார்ப்போம்.

அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.

வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

மலச்சிக்கல்:

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

மூச்சுப்பிடிப்பு:
கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சருமநோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.