கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவர் காலமான பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற சந்தேகம் தமிழகம் முழுவதும் தொடங்கியது.
இந்த கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் மெல்ல, மெல்ல முடிவு தெரிந்து கொண்டிருந்தது. அதாவது சசிகலாவால் முதல்வராக நியமனம் செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் விரைவில் அவரே நிரந்தர பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஜெயலலிதா உயிரிழந்த ஒரு சில மாதங்களிலேயே இந்த கட்சி பிரச்சினையை தவிர்த்து புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியது.
அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017 ஆம் வருடம் ஏப்ரஹர் மாதம் 23ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் ஒரு சம்பவம் நடைபெற்றது.
அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவ்வப்போது அங்கே சென்று தங்கி வருவார். இது எதிர்க்கட்சியினரிடையே மிகப்பெரிய புயலை கிளப்பியது.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் ஜெயலலிதா கொட நாட்டிற்கு மட்டும்தான் முதல்வராக செயல்படுகிறார் என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
அதாவது கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அந்த பங்களாவில் இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளியை மர்ம நபர்கள் கொலை செய்து அங்கு இருந்த முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.
அதோடு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் அதிமுகவின் மிக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வழக்கில் விசாரணை செய்வதில் மிக தீவிரமாக இறங்கியது.முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருக்கலாம் என ஆளும் கட்சி சந்தேகிக்கிறது.
இது குறித்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா உட்பட 300-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதோட கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் மற்றும் 2 கூடுதல் டிஎஸ்பிக்கள், 3 டிஎஸ்பிக்கள் அடங்கிய தனிப்படையை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தனி படை காவல்துறையினர் மிக விரைவில் விசாரணையை ஆரம்பிக்கவிருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.