ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்ல விராட் கோலி புது பார்முலா ?

0
192

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்லை விராட் கோலி புது பார்முலா ?

ஆஸ்திரேலியாவை வென்ற பார்முலா நியுசிலாந்தில் செல்லாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடரை வென்ற உற்சாகத்தோடு இந்திய அணி நியுசிலாந்துக்கு சென்றுள்ளது. அன்று நாளை முதல் தொடங்கும் 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலி நியுசிலாந்து தொடர் குறித்துப் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது :-’நியுசிலாந்து அணி அதன் தாய்நாட்டில் மிகவும் பலமான அணி. ஆடுகளங்களை அவர்கள் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். எனவே இந்திய அணியும் சிறப்பாக ஆடினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால் நாமும் இங்கு குறிப்பிடத்தக்க போட்டிகளை விளையாடியுள்ளோம். நாம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளோம் என்ற பார்முலா எல்லாம் இங்கு உதவாது.

ஒவ்வொரு தொடரையும் சிறப்பாக விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். நியுசிலாந்து அணியை அதன் மண்ணில் வெல்லும் சவாலுடன் வந்துள்ளோம். அதற்கு தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி டி 20 போட்டிகளில் மிகவும் மோசமான சாதனை வைத்துள்ளது நியுசிலாந்து அணியுடந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணி சம பலத்துடன் இருப்பதால் போட்டிகளில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Previous articleநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? குற்றவாளிகளின் பதில் !
Next articleகீழே ஆடை எதுவுமில்லாமல் முற்றும் துறந்த பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here