நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? குற்றவாளிகளின் பதில் !

0
247

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? குற்றவாளிகளின் பதில் !

நிர்பயா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன என்பது குறித்து சிறைத்துறை நிர்வாகம் குற்றவாளிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாகவும் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். இதற்கிடையில் சிறையில் இருந்த குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடவேண்டும் என தீர்ப்பு வெளியானது. இதை அடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் தூக்கில் இடப்பட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து இதற்காக ஹேங்க்மேன் மற்றும் தூக்குக் கயிறு ஆகியவைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்குத் தண்டனை கைதிகளிடம் வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வியான குற்றவாளிகளின் கடைசி ஆசை தொடர்பான கேள்வியை கேட்டுள்ளது. ஆனால் சிறைத்துறையின் கேள்விக்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்துவருவதாக  சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குற்றவாளிகளின் தூக்கு சம்மந்தமாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிடீரென மூழ்கிய ஸ்பெயின் நாட்டின் நகரம்: அதிர்ச்சி காரணம்
Next articleஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்ல விராட் கோலி புது பார்முலா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here