“குறைகளுக்காக மன்னிச்சுடுங்க… அடுத்த படம் நல்ல படமா இருக்கும்…” குருதி ஆட்டம் இயக்குனரின் எமோஷனல் பதிவு

0
214

“குறைகளுக்காக மன்னிச்சுடுங்க… அடுத்த படம் நல்ல படமா இருக்கும்…” குருதி ஆட்டம் இயக்குனரின் எமோஷனல் பதிவு

குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷின் சமூகவலைதளப் பதிவு இனையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக கவனம் பெற்ற இயக்குனர் ஸ்ரீகணேஷ், 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கிய திரைப்படம் ‘குருதி ஆட்டம்’. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பல போராட்டங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆனது.

ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான திரைக்கதை மற்றும் இயக்கம் என எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது. அதே போல வசூலிலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு பர்ஃபார்ம் செய்யவில்லை. வந்த வேகத்தில் திரையரங்குகளில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இயக்குனர் ஸ்ரீகணேஷ் மேலும் படத்தில் குறைகளுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.

அவரின் முகநூல் பதிவில் “பட ரிலீஸின் போது எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி. அவர்களுக்கு பதிலுக்கு சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அதே போல படத்தில் இருந்த குறைகளுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், படம் சம்மந்தமான அனைத்துக் கருத்துகள் மற்றும் விமர்சனங்களைப் படித்தேன். கடினமாக உழைத்து அடுத்த படத்தை இன்னும் சிறப்பான படமாகக் கொடுக்க முயற்சி செய்வேன்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Previous articleஜிம்பாப்வே தொடர் வெற்றி… ஜாலியாக ஆட்டம் போட்ட இந்திய அணி… வைரல் வீடியோ!
Next articleநர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர்  நீதி மன்றம் அதிரடி உத்தரவு!