அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை! ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த நோயாளிகள்!

0
257
Lack of oxygen in the government hospital! Patients died one after another!
Lack of oxygen in the government hospital! Patients died one after another!

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை! ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த நோயாளிகள்!

அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருந்துகள் இல்லை என்ற புகார் சமீப காலமாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்ற புகார் வந்துள்ளது. காஞ்சிபுரம் அருகே நசரத பேட்டை என்ற பகுதியில் குடியிருப்பவர் கலாநிதி. இவர் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியராக பணியாற்றி வந்தார். வயது முதிர்வு காரணமாக தற்பொழுது ஓய்வு பெற்று விட்டார். இவருக்கு சில காலமாக சுவாச கோளாறு பிரச்சனை இருந்துள்ளது. இது சம்பந்தமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இது குறித்த சோதனை செய்தார்.

அவ்வாறு சோதனை செய்ததில் இவருக்கு காசநோய் இருப்பது தெரியவந்தது. இவருக்கு காசநோய் தீவிரம் அடைந்ததையொட்டி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவர் தனது பேரனிடம் உணவு வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவரது பேரன் உணவு வாங்குவதற்கு முன் அவரது பாட்டியின் ஆக்ஸிஜன் மற்றும் இதயத் துடிப்பு நிலையை பார்த்து விட்டு சென்றார். அப்போது ஆக்சிஜன் சரிவு 12 என்ற நிலையிலும் ,இதயத்துடிப்பு 100 என்ற நிலையிலும் இருந்துள்ளது.

அதுவே இவர் உணவு வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது ஆக்ஸிஜன் மற்றும் இதயத் துடிப்பு நிலை மிகவும் குறைந்து காணப்பட்டது. இவரது பாட்டி கலாநிதியும் எந்த ஒரு அசைவும் இன்றி காணப்பட்டார்.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பேரன், அங்கிருந்த செவிலியரை அழைத்து ஆக்சிஜன்  அளவு குறைந்து இருப்பதை சரி செய்யுமாறு கேட்டுள்ளார். இது குறித்து மருத்துவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மருத்துவர் பிற நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டிருக்கும் ஆக்சிஜனை சோதனை செய்து பார்த்ததில் மற்ற நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவும் குறைந்து தான் காணப்பட்டது.

இதனையாடுத்து கலாநிதியை சோதனை செய்யும் போது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து விட்டது. மருத்துவர்கள் ஆக்ஸிஜன் அளவை கூட்டி வைப்பதற்குள்ளையே கலாநிதி உயிரிழந்து விட்டார். உடனடியாக அவரது பேரன் அவருடைய அப்பாவிற்கு அழைப்பு விடுத்து இது குறித்து கூறியுள்ளார். மருத்துவமனைக்கு வந்த அவருடைய மகன் அங்கிருந்த மருத்துவரிடம் தனது தாய் இறந்தது குறித்து அங்கிருந்த மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் முறையான படி சிகிச்சை கொடுக்காமல், ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் தனது தாய் உயிரிழந்து விட்டார்.

எனது அம்மாவை நீங்கள் தான் கொன்று விட்டீர்கள் என்று மருத்துவரை பார்த்து கேள்வி எழுப்பினார். இவருக்கு பதிலளிக்கும் விதத்தில் மருத்துவர், உனது தாயிற்கு செல்லப்பட்ட ஆக்சிஜன் அளவு தான் மற்ற நோயாளிகளுக்கும் இருந்தது. இந்த நான்கு நோயாளிகளுக்கு மட்டும் தான் குறைவான ஆக்ஸிஜன் அளவு காட்டியது எனக் கூறினார். நீங்கள் மருத்துவமனையில் இவ்வாறு கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டால் உங்கள் தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்து தான் அனுப்புவோம் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட கலாநிதி யின் மகன் அதிரிச்சியில் உறைந்து தனது தாயை நான் பிரேத பரிசோதனை செய்ய விரும்பவில்லை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன் எனக் கூறி சென்று விட்டார். இவரது தாய் கலாநிதி உயிரிழப்பதற்கு முன்பு மற்றொரு வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளார்.

மேலும் கலாநிதியின் மகன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை குறித்து பல குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார். அங்கிருக்கும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் அனைவரும் அவருடைய வேலைகளை முறையான படி செய்யவில்லை. அதேபோல நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகள் எதுவும் அங்கு காணப்படவில்லை எனக் கூறியுள்ளார். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,எனக்கு ஏற்பட்ட இழப்பு போல் யாருக்கும் ஏற்படக் கூடாது என தெரிவித்தார்.

Previous articleஏழு மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்! ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
Next articleசட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது!