சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது!

0
132

சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது!

சட்டசபையில் மழைக்கால கூட்டுத்தொடர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

இரண்டாவது நாளான நேற்று சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை தொடர்பான விவகாரம் வெடித்தது.மேலும் அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை பாநாயகர் அப்பாவூர்,அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.இதனால் வெளியே வந்த இபிஎஸ், சபாநாயகர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என குற்றம் சாடினார்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்காததை எதிர்த்து இன்று அக்டோபர் 19 ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக இபிஎஸ் தரப்பு முடிவு செய்தனர்.மேலும் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி இபிஎஸ் தரப்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு,சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இந்த போராட்டத்தில் திமுகவிற்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதன் காரணமாக காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதனால் இபிஎஸ் உள்ளிட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார்,கேபி முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra