பெண்களே உங்களுக்கு மாதவிடாய் வலி அதிகமாக உள்ளதா!! அதை எப்படி குறைப்பது!! எப்படி வராமல் தடுப்பது… இதோ சில வழிமுறைகள்!!

0
114

பெண்களே உங்களுக்கு மாதவிடாய் வலி அதிகமாக உள்ளதா!! அதை எப்படி குறைப்பது!! எப்படி வராமல் தடுப்பது… இதோ சில வழிமுறைகள்!!

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை வராமல் தடுக்க சில வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்த வழிமுறைகள் அனைத்தும் இயற்கையானது. மற்றும் வலியை குறைக்க உதவும். மேலும் மாதவிடாய் வலி வராமல் தடுக்க உதவும்.

மாதவிடாய் வலி வராமல் தடுக்க சில வழிமுறைகள்…

* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வழியை வராமல் தடுக்க பெண்கள் அனைவரும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

* பெண்கள் மட்டுமல்ல அனைவரும் மாதுளம் பழத்தை மற்றும் சாப்பிட்டு விட்டு அதன் உட்புறத் தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த உட்புறத் தோலில் பல சத்துக்கள் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் வலி வராமல் இருக்க மாதுளம் பழத்தின் அந்த உட்புறத் தோலை சாப்பிட வேண்டும்.

* மாதவிடாய் வலியை குறைக்கவும் வராமல் தடுக்கவும் பெண்கள் நார்ச்சத்துக்ள் அதிகம் உள்ள பீன்ஸ் காயை சாப்பிடலாம்.

* மாதவிடாய் காலங்களில் பெண்கள் செக்கு நல்லெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்கள் குடிக்க வேண்டும். இதனால் உடலில் வலிமை கிடைக்கும்.

* மாதவிடாய் வலி குறையவும், வராமல் தடுக்கவும் பெண்கள் கறிவேப்பிலையை தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிடலாம்.

* தினமும் ஒரு நாளுக்கு இரண்டு முறை மோர் குடிக்க வேண்டும். இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலி தடுக்கப்படும்.

* மாதவிடாய் வலியை தடுக்க பெண்கள் சிவப்புநிற கைக் குத்தல் அரிசியை சாப்பிடலாம்.

* மாதவிடாய் வலியை குறைக்கவும் தடுக்கவும் பெண்கள் உளுந்தங்கஞ்சி செய்து அதில் பனை வெல்லத்தை சேர்த்து சாபிடலாம்.

Previous articleஉடலை குறைக்க உதவும் வாட்டர் டீடாக்ஸ் முறை!! எப்படி செய்வது..? இதனால் என்ன பயன்கள்..?
Next articleசர்க்கரை நோயா? கவலை வேண்டாம்… வாரத்திற்கு 3 முறை இந்த ஜூஸ் குடித்தாலே போதும்!