உடலை குறைக்க உதவும் வாட்டர் டீடாக்ஸ் முறை!! எப்படி செய்வது..? இதனால் என்ன பயன்கள்..?

0
65

உடலை குறைக்க உதவும் வாட்டர் டீடாக்ஸ் முறை!! எப்படி செய்வது..? இதனால் என்ன பயன்கள்..?

உடலைக் குறைக்க வேண்டும் என்றால் இந்த வாட்டர் டீடாக்ஸ் என்ற வழிமுறையை பயன்படுத்தலாம். இதை எப்படி செய்வது, இதற்கான பொருள்கள் என்னென்ன, இதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

உடலை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் பலரும் டயட் இருப்பார்கள். உடற்பயிற்சிகள் மேற்கொள்வார்கள். மேலும் வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது எல்லாம் முழுவதுமான பலன்களை தருமா என்பது தெரியவில்லை. அதற்கு மாற்றாக இந்த வாட்டர் டீடாக்ஸ் வழிமுறையை உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுத்தி பாருங்கள்.

வாட்டர் டீடாக்ஸ் முறை உடல் எடையை குறைக்கும் என்று கூறப்படுகின்றது. அனைவரும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி, டீ போன்றவற்றை குடிக்கின்றோம். அதற்கு பதிலாக இந்த வாட்டர் டீடாக்ஸ் முறையை பயன்படுத்தி பாருங்க. இதை எப்படி செய்வது என்ன பொருள்கள் தேவை என்று பார்க்கலாம்.

வாட்டர் டீடாக்ஸ் செய்ய தேவையான பொருள்கள்…

* வெள்ளரிக்காய்
* புதினா
* எலுமிச்சை

செய்யும் முறை…

தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதில் வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி இரண்டு முதல் நான்கு துண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் எலுமிச்சையை வட்டமாக அறுத்து இரண்டு துண்டுகளை இந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் புதினா ஆலைகளை அப்படியே போட்டாலும் சரி. நசுக்கி போட்டாலும் சரி.

பின்னர் 10 நிமிடங்கள் கழித்து இதை குடிக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடல் எடை குறையும்.

வாட்டர் டீடாக்ஸ் வழிமுறையின் நன்மைகள்…

* வாட்டர் டீடாக்ஸ் வழிமுறையை பின்பற்றினால் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையாமல் இருக்கும்.

* இந்த வாட்டர் டீடாக்ஸ் முறையை பின்பற்றினால் உடலில் தேவையில்லாமல் உள்ள கெட்ட கொழுப்புகள், கலோரிகள் கரைந்து விடுகின்றது.

* காலையில் வாட்டர் டீடாக்ஸ் தண்ணீரை குடித்தால் செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்கின்றது.

* வாட்டர் டீடாக்ஸ் முறையை பயன்படுத்தினால் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த உதவி செய்கின்றது.

* இந்த வாட்டர் டீடாக்ஸ் தண்ணீரில் விட்டமின் சி சக்தி அதிகமாக இருக்கின்றது. இதனால் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறுகின்றது. மேலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.