பெண்களே எச்சரிக்கை! இனி ஹை ஹீல்ஸ் அணிய வேண்டாம்!
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் நாகரீக வாழ்விற்கு பழகி விட்டார்கள் அந்த வகையில் உணவிலும் நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
மாற்றத்தினால் மூட்டுகளில் வீக்கம் எலும்புகள் தேய்மானம் நடக்க இயலாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அவ்வாறான பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் மூலம் காணலாம். மூட்டு மற்றும் குருத்தெழும்புகள் சேதமடைந்தால் அதனை மீண்டும் சரி செய்ய முடியாது. சிறுவயதிலிருந்தே மூட்டுகளை பாதுகாப்பது என்பது மிக அவசியம்.
குறிப்பாக பெண்களுக்கு மட்டுமே இவ்வாறான பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுகின்றது அதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
உடல் எடையில் பராமரிப்பு தேவை அதிக உடல் எடையால் மூட்டுகளில் கூடுதல் சுமை சேர்வதன் மூலம் மூட்டுகள் வேகமாக தேய்மானமடையும். மேலும் ஒவ்வொரு கூடுதல் கிலோ உடல் எடையும் சம்பந்தப்பட்ட செயல்பாட்டை பொருத்ததாகும்.
முழங்கால் மூட்டில் 4 முதல் 6 கிலோ வரை கூடுதல் சுமையை ஏற்றுக் கொள்ளும். மேலும் அதிகப்படியான கொழுப்பு திசு குருத்தெழும்புகளை அளிக்கும் தன்மை கொண்டது.
நாம் அமரும் முறை:
நாம் எப்பொழுதும் மோசமான முறையில் நீண்ட நேரம் அமர்வதன் மூலம் மூட்டுகளில் அசாதாரணமாக அதிகப்படியான சுமை ஏற்படுகிறது. அதனால் அவை வேகமாக தேய்ந்துவிடும். நாம் நிற்கும் பொழுதும், அமர்ந்திருக்கும் பொழுதும் மற்றும் நடக்கும்பொழுதும் அனைத்து உடல் மூட்டுகளையும் ஆரோக்கியமாக சீரமைத்தால் அவற்றை மூட்டு வலியிலிருந்து பாதுகாக்க முடியும்.
நாம் காலனி அணியும் முறை:
தற்போதுள்ள காலகட்டத்தில் நாகரிகம் என்று பெண்கள் விதவிதமாக காலனி அணிந்து செல்கின்றனர். ஆனால் அவைகள் அனைத்தும் நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஒருவரும் அறிவதில்லை.
இந்த வகையில் பெண்கள் ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவதன் மூலம் கால் கணுக்கால் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டு மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். உடல் அவற்றின் தன்மையில் இருந்து மாறுபட்டு காணப்படும். நீண்ட நேரம் ஹை ஹீல்ஸ் அணிவதன் மூலம் மூட்டு வலி ஏற்படுகின்றது.