பெண்களே.. மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர இப்படி செய்யுங்க போதும்!!

0
110

பெண்களே.. மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர இப்படி செய்யுங்க போதும்!!

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் புருவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் எல்லா பெண்களுக்கும் புருவம் அடர்த்தியாகவும்,கருமையாகவும் இருப்பதில்லை.இதனால் பல பெண்கள் சில நாட்களிலேயே புருவம் வேகமா வளர வேண்டும் என்பதற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்த ஆரமிக்கின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் பக்க விளைவுகள் வருமே தவிர எந்த ஒரு பலனையும் பெற முடியாது என்பது தான் நிதர்சனம்.இதற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத இயற்கை முறை மூலம் நல்ல தீர்வு பெற முடியும்.

தேவையான பொருட்கள்:-

கற்றாழை ஜெல்                        – 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்            – 1 ஸ்பூன்

விளக்கெண்ணெய்                  – 1 ஸ்பூன்

வைட்டமின் இ காப்ஸ்யூல்   – 1

செய்முறை:-

முதலில் கற்றாழையின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.பின் ஒரு சிறிய பவுல் எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி,தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி,விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி மற்றும் கடைசியாக ஒரு வைட்டமின் இ காப்ஸ்யூல் 1 சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுதல் வேண்டும்.இவ்வாறு செய்த ரெமிடியை இரவு தூங்குவதற்கு முன் புருவத்தின் மேல் தடவிவிட்டு படுக்க வேண்டும்.இதனை தொடர்ந்து செய்து வர 7 நாட்களில் புருவத்தில் நல்ல மாற்றம் காண முடியும்.

Previous articleபெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!!
Next articleகர்ப்பிணிகள் வாழைக்காயை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படுமா? அலசுவோம்