2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி தேதி!! ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்!!

0
94
Last date to exchange 2000 rupee notes!! Shocking information of RBI!!
Last date to exchange 2000 rupee notes!! Shocking information of RBI!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி தேதி!! ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்!!

பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த ரூ 2000 நோட்டுகள் மூன்றில் இரண்டு பங்கு சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது.

திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசார்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மார்ச் மாதம்  31 ம் தேதி மட்டும் ரூ 3.62 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் பயன்பாட்டில் இருந்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு மதிப்புடைய ரூ 2.41 லட்சம் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டது.

பெறப்பட்ட ரூ 2000 நோட்டுகளில் 85 சதவீதம் வங்கிகளில் செலுத்தப் பட்டதன் காரணமாகவும் மீதம் உள்ள 15 சதவீதம் வேறு நோட்டுகள் வாங்கப்பட்டதன் காரணமாகவும் பெறப்பட்டது.

இது நாட்டின் நிதி நிலைமையை மாற்றி பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.

இந்த நிலையில் தற்பொழுது ரிசர்வ் வங்கியானது 76 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுவிட்டதாக கூறியுள்ளது. அதிலும் மீதமுள்ள 24 சதவீதத்தை கூடிய விரைவில் திரும்ப பெறப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.மேலும் இது குறித்து ரிசர்வ் வங்கி   காலக்கெடு ஒருபொழுதும் நீடிக்கப்பட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

இவ்வாறு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதன் மூலம் பண வளர்ச்சி 8 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் இயந்திரங்கள் வாங்க மானியம் அனைவரும் விண்ணப்பிக்கலாம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Next articleபாவங்கள் விலகும் புனித யாத்திரையில் இதுவரை 36 பேர் பலி!! அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!!