சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது – இசக்கி சுப்பையா!!

0
248
#image_title

இசக்கி சுப்பையா சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது. அதனால் வன்முறை இல்லாமல் தமிழகம் அமைதியான மாநிலமாக இருந்தது.

அதிமுக ஆட்சி காலத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலம் தான் சட்டத்துறையின் வசந்தகாலமாக இருந்தது. சட்ட ஆணையம் அதிமுக ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நடைமுறைக்கு ஒவ்வாத பல சட்டங்கள் நீக்கப்பட்டது. குற்ற வழக்குகளில் விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் நீதிமன்றங்கள் துவங்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை அமைக்கப்பட்டது போல சட்டக்கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும்.

தனியார் சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் போது, உரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பதை பார்த்து அனுமதி வழங்க வேண்டும்.

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை விசாரிக்க மாவட்ட வாரியாக தனி நீதிமன்றங்கள் அமைத்து விரைந்து நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பேச்சு.

Previous articleஇடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!
Next articleநடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது – திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!!