முக்கிய திமுக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு! தேர்தல் நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி!

Photo of author

By Rupa

முக்கிய திமுக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு! தேர்தல் நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி!

இரண்டு ஆண்டு காலமாக கொரோனா என்ற பெருந்தொற்றால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டனர். தற்போது வரை அதற்கென மொழியின் பல்வேறு வளர்ச்சி அடைந்து வருகிறது. வருடந்தோறும் புதுப்புது பரிமாற்றத்தை உருவாக்கி மக்களை பீதியடையச் செய்கிறது. இதில் பாமர மக்களை விட அதிக பிரபலம் அடைந்தவர்களே பலியாகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு இரண்டு அலையின் போது அதிக அளவு அரசியல் பிரமுகர்கள் இந்தத் தொற்றால் உயிரை இழந்தனர். குறிப்பாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவதற்குள் பல திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்ட தங்களின் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அதற்கடுத்ததாக தற்பொழுது வரும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிப்பு செய்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி 9வது வார்டு திமுக வேட்பாளர் தான் அனுசியா.

இவர்  சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அய்யம்பேட்டை ஒன்பதாவது வார்டு திமுக வேட்பாளர் அனுசியாவிற்கு இன்று காலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்பு அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அனுசுயாவை பரிசோதனை செய்த மருத்துவர் இவர் முன்னதாகவே இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.

அவர் இறந்த தகவல் கட்சி மற்றும் அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. உள்ளாட்சித் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிலையில் பல வார்டுகளில் வேட்பாளர்கள் உடல்நலக்குறைவால் இறந்து வருகின்றனர். இவ்வாறு மரணமடையும் வேட்பாளர்களின் வார்டுகளில் தேர்தல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அய்யம்பேட்டை பேரூராட்சியில் ஒன்பதாவது வார்டிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று பேசப்பட்டு வருகிறது.