தொடர் கனமழை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..!

Photo of author

By Janani

தொடர் கனமழை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..!

Janani

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் சேதமடைந்தன.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.