Breaking News

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்!

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்!

தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயிற்ச்சி கட்டாயம் இல்லையேல் நடவடிக்கை பாயும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தேர்தல் பணியில் ஈடுபத்தப்பட்டுள்ளனர்.

எனவே தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி முகாம் நடத்தவுள்ள நிலையில் சென்னையில் 26இடங்களில் இன்று நடைபெறுகிறது, இந்த பயிற்சி முகாமில் சென்னையில் மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட 3719 வாக்கு சாவடிகளில் 1000 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கருதப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே வாக்குபதிவு மையத்திற்கு வாக்குசாவடி தலைமை அலுவலகர்கள், வாக்குப்பதிவுஅலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இன்று காலை 9.30மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வகுப்பில் கலந்து கொள்வது அவசியம் அவ்வாறு கலந்துக் கொள்ளாதவர்கள் மீது சட்டபூர்வ ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.