இன்னும் ஒரு வாரம் தான் சட்டமன்ற கூட்டத் தொடர்! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு!!

Photo of author

By Savitha

இன்னும் ஒரு வாரம் தான் சட்டமன்ற கூட்டத் தொடர்! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு!!

Savitha

ஒரே நாளில் 5 துறைகள் மானியக் கோரிக்கை விவாதிப்பது 3 ஆண்டுகளில் நடக்காதது.

சிறு பான்மை நலத்துறை, மெட்ரோ என முக்கிய துறைகள் எல்லாம் மானிய கோரிக்கை விவாதிக்கப்பட்டது.

ஒரே நாளில் எப்படி குறைகளையும், நிறைகளையும் விவாதிப்பது.

பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கு 5 நிமிடங்களுக்கு மேல் சட்டமன்றத்தில் நேரம் கொடுக்கப்படுவதில்லை.

எதிர்கட்சி தலைவர் சட்டமன்ற உரையினை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதில்லை.சட்டமன்றத்தில் ஜனநாயாக படுகொலை நடக்கிறது.

51 ஆண்டுகால அதிமுகவில் 31 ஆண்டு கால ஆட்சியில் எந்த சிறுபான்மையினருக்கும் தீங்கு ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர்கள் என கூறினார்.