திருமணம் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றிய பெண் கைது!!

0
121
#image_title

கரூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர், பெண் பார்க்க சொல்லி திருமண தரகர் பாலமுருகனிடம் சொல்லி உள்ளனர்.

பாலமுருகனுக்கும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அமிர்தவள்ளி என்ற பெண் தரகருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விக்னேஸ்வரனை பற்றி அமிர்தவள்ளியிடம், பாலமுருகன் கூறியுள்ளார்.

எனக்கு தெரிந்த பெண் இருக்கிறாள். ஆனால் அவளுக்கு பெற்றோர் இல்லை என அமிர்தவள்ளி கூறியுள்ளார்.இதனை அறிந்து விக்னேஸ்வரன், தேவி என்ற பெண்ணை பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தேவி, விக்னேஷிடம் விருதுநகரில் எனக்கு ஒரு சித்தி இருக்கிறார், நம்மை விருந்துக்கு அழைத்துள்ளார், என சொல்லி விக்னேஸ்வரனை கூட்டிக் கொண்டு விருதுநகர் சென்றுள்ளார்.

விருதுநகர் சென்ற பின், நானும் என் சித்தியும் கடைக்கு சென்று விட்டு வருகிறோம். நீங்க இங்கேயே இருங்க என்று சொல்லிவிட்டு, தேவியும் அவளது சித்தியும் தப்பித்துள்ளனர்.

வெகுநேரம் ஆகியும் இவர்களை காண வில்லை என்பதால், விக்னேஸ்வரன் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்கவில்லையே, என நினைத்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

விசாரணக்கு பின்னரே. தேவி இதற்கு முன், பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளது தெரியவந்தது.

திருமணம் செய்த ஆண்களின் வீட்டில், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளார், மேலும் தேவியை காவல்துறையினர், திருமண மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
Jayachithra