இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை… இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?

0
99

 

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை… இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?

 

வெயில் காலமாக இருந்தாலும் சரி மழை காலமாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் விரும்பி குடிக்கக் கூடிய ஜூஸ் வகைகளில் எலுமிச்சம் பழச்சாறும் ஒன்று.

 

எலுமிச்சம் சாற்றை தரும் எலுமிச்சம் பழத்தில் அதிக நன்மைகள் உள்ளது. இந்த எலுமிச்சம் பழத்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது.

 

எலுமிச்சம் பழத்தில் பல வகையான சத்துக்கள் உள்ளது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அதிக அளவு உள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் இ, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளது.

 

இந்த எலுமிச்சம் பழத்தை சாறாகவும், உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுதும் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது.

 

எலுமிச்சம் பழம் மூலமாக கிடைக்கும் நன்மைகள்…

 

* எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

 

* எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளும் பெழுது செரிமானம் மேம்படைகின்றது.

 

* எலுமிச்சம் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகின்றது.

 

* உடலில் நீர் சத்தை தக்க வைக்க எலுமிச்சம் பழம் உதவி செய்கின்றது.

 

* எலுமிச்சம் பழத்தை நாம் பயன்படுத்தும் பொழுது சருமம் பளபளப்பாக இருக்கும்.

 

* உடலில் உள்ள பிஎச் அளவை சமநிலைப்படுத்த எலுமிச்சம் பழம் உதவி செய்கின்றது.

 

* எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம்.

 

* புற்றுநோயை தடுக்க எலுமிச்சம் பழம் உதவி செய்கின்றது.

 

* குடல் இயக்கத்தை மேம்படுத்த எலுமிச்சம் பழம் சிறப்பாக உதவி செய்கின்றது.

 

* மேலும் எலுமிச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கின்றது.

 

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எலுமிச்சம் பழம் சிறந்த நிவாரணியாகும்.

 

* மேலும் எலுமிச்சம் பழம் சிறுநீரகம், கல்லீரல், இரத்தத்தையும் சுத்தப்படுத்துகின்றது.

 

Previous articleமுடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா… அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க…
Next article5 பொருள் போதும்! சர்க்கரைக்கு சமாதி கட்டி விடலாம்!