முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா… அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க…

0
31

 

முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா… அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க…

 

நமக்கு இருக்கும் முக்கிய பிரச்சனையான முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை பிரச்சனைக்கு ஒரே ஒரு பொருளை பயன்படுத்தி எவ்வாறு தீர்வு காண்பது என்று இந்த பதிவில் காணலாம்.

 

முடி உதிர்தல் பிரச்சனை எல்லாருக்கும் மனக் கவலை தரும். இந்த பிரச்சனைக்கு காரணம் பொடுகுதான். பொடுகுப் பிரச்சனையை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் நமக்கு தலையில் முடி உதிர்தல், சொறி, அரிப்பு, புண் ஆகியவை ஏற்படும்.

 

இதற்கான சிறந்த தீர்வை மிளகு நமக்கு அளாக்கும். இந்த பதிவில் மிளகை பயன்படுத்தி எவ்வாறு முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை ஆகிய பிரச்சனைகளை சரி செய்வது என்று பார்க்கலாம்.

 

* இளம் வயதில் வெள்ளை முடி இருப்பவர்களும், முடி சாம்பல் நிறத்தில் இருப்பவர்களும் கருப்பு மிளகு பொடியை தயிருடன் கலந்து அதை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகு பிரச்சனை சரியாகி முடி உதிர்தல் தடுத்து நிறுத்தப்படுகின்றது. மேலும் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கலாம். தயிர் தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை இது போக்கும்.

 

* ஒரு கப் தயிர் எடுத்துக் கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் கருப்பு மிளகு பொடியை கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் இறுதியாக தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து இதை உச்சந்தலையில் அழுத்தி தேய்க்கவும். மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து தலையை கழுவி விடலாம். இதனால் பொடுகுத் தொல்லை குணமடைகின்றது. முடி உதிர்தல் பிரச்சனை சரியாகின்றது.

 

* கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

 

* ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகுத் தூளை சிறிதளவு ஆலிவ் எண்ணெயில் கலந்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இது போல வாரம் இரு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை இருக்காது. முடி உதிர்தல் தடுக்கப்படம்.