எலுமிச்சை ஊறுகாய்: கேரளா ஸ்டைலில்.. நாவூறும் சுவையில்..!

Photo of author

By Divya

எலுமிச்சை ஊறுகாய்: கேரளா ஸ்டைலில்.. நாவூறும் சுவையில்..!

எலுமிச்சை ஊறுகாய் என்றால் பலருக்கு விருப்பமான ஒன்றாக இருக்கின்றது. இந்த ஊறுகாய் கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

ஊறுகாய் செய்ய தேவைப்படும் பொருட்கள்…

1)எலுமிச்சை – 10 முதல் 15 வரை
2)இஞ்சி – 1 துண்டு
3)வர மிளகாய் – 4
4)கறிவேப்பிலை – 1 கொத்து
5))பூண்டு பல் – 30
6)பச்சை மிளகாய் – 5
7)கடுகு – தேவையான அளவு
8)வினிகர் – 1/4 கப்
9)பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவு
10)வெந்தயப்பொடி – 1/4 ஸ்பூன்
11)மஞ்சள்தூள் – ;சிறிதளவு
12)சர்க்கரை – 1 ஸ்பூன்
13)உப்பு – தேவையான அளவு
14)நல்லெண்ணெய் – தேவையான அளவு

எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கும் முறை…

*எடுத்து வைத்த எலுமிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

*அடுப்பில் இரும்பு கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய விடவும். பிறகு அதில் கடுகு, பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய், இஞ்சி துண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

*பிறகு வெந்தயப்பொடி, மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

*அடுத்து நறுக்கிய எலுமிச்சம் பழத் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.

*இதன் பின்னர் தேவையான அளவு சூடு நீர் சேர்த்து கலந்து விடவும்.

*இறுதியாக உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். ஊறுகாய் நன்கு வெந்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும்.

இந்த எலுமிச்சம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டும் என்றால் கண்ணாடி பாட்டிலில் போட்டு பயன்படுத்தலாம். இந்த எலுமிச்சை ஊறுகாய் சாப்பிட அதிக ருசியாக இருக்கும்.