உலகளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ! எப்படியோ 1000 கோடில பாதிய தாண்டியாச்சு!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் தற்பொழுது உலக அளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், மேத்யூ தாமஸ், திரிஷா, பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனணி, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் அவர்கள் லியோ திரைப்படத்தை தயாரித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானது.
எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் லியோ திரைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மேலும் உலக அளவில் வசூலில் லியோ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
லியோ திரைப்படம் வெளியான முதல் நாளே 148 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் தற்பொழுது லியோ திரைப்படம் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
எப்படியோ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கூறியதில் லியோ திரைப்படம் தற்பொழுது அதில் பாதியை வசூல் செய்து காட்டியுள்ளது. இதன் மூலமாக லியோ திரைப்படம் உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் தற்பொழுது மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 2.0 திரைப்படமும் இரண்டாவது இடத்தில் ஜெயிலர் திரைப்படமும் இருக்கின்றது.