லியோ படம் ரீலிஸ்-க்கு முன்பே இவ்வளவு கோடியா?? ரீலிஸ் ஆனால் எவ்வளவு கோடியாக இருக்கும் !!
தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் அவர்களுடன் திர்ஷா ,யோகி பாபு ,அர்ஜுன் ,பாலிவுட் ஆக்டர் சஞ்சய் தத் அவர்கள் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் சமீபத்தில் மறைந்த மனோபாலா மற்றும் கைதி பட ஜார்ஜ் மரியன் மேத்யூ தாமஸ் போன்ற பல நடிகர்கள் இணைத்து நடித்து உள்ளனர்.
படபிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்ற நிலையில் தற்பொழுது அக்டோபர் 19 ம் தேதி படத்தின் பிரோமொசன் பணிகள் நடைபெறும் என்று படக்குழு கூறியுள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் முழு கவனம் செலுத்தி வருகின்றார். எனவே தளபதி ரசிகர்களும் இதனை பெரிய அளவில் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த படப்பிடிப்பு 6 மாதத்தில் 125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் வெளி வருவதற்கு முன்பே 350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருமானம் ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் போன்றவைகளில் அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
அந்த வகையில் தற்பொழுது லியோ படத்தின் ஹிந்தியில் வெளியிடும் உரிமையை கோல்ட் மைன்ஸ் நிறுவனம் 280 கோடி கைபற்றியுள்ளது.அதன் அடுத்த நிலையில் ஓவர்சீஸ் உரிமையை பாரிஸ் நிறுவனம் 60 கோடி கொடுத்து கைபற்றியுள்ளது.
அதனை தொடர்ந்து கர்நாடகாவில் வெளியிட்டு உரிமையை 15 கோடி கொடுத்து 2 பார்ட்டீஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது.மேலும் தெலுங்கு மொழியில் வெளியிட்டு உரிமையை ரூ.21 கோடி கொடுத்து சித்தாரா என்டர்டைன் நிறுவனம் கைபற்றியுள்ளது.
எனவே படம் மட்டும் ரீலிஸ் ஆனால் 1000 கோடி வசூல் செய்து விடும் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.இதனை தொடர்ந்து லியோ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.