பொதுமக்களே உஷார்!! இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! 

0
50

பொதுமக்களே உஷார்!! இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! 

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவி வருகிறது. அதையடுத்து மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று  (21.07.2023) முதல் 23.07.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

24.07.2023 , 25.07.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்ததாக 26.07.2023, 27.07.2023 வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு வானமானது ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படலாம். நகரின் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மேலும் வெப்பநிலையானது அதிகபட்சமாக 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 29-30 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கும்.

21.07.2023 , 22.07.2023 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம். மேலும் எப்போதும் இருக்கக்கூடிய வெப்ப நிலையில் இருந்து இயல்பாக 2 – 4 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்து காணப்படும்.

மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தத்தின் காரணமாக அசௌகரியம்  ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று சென்னை வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.