லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!!! இணையத்தில் வைரலாகும் பேடேஸ்!!!

0
146
#image_title

லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!!! இணையத்தில் வைரலாகும் பேடேஸ்!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான பேடேஸ் என்ற பாடல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்த பாடல் ரசிகர்களின் மத்தியில் மிக வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் மீது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கு காரணம் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் கூட்டணி தான் முதன்மையான காரணம்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், திரிஷா, மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் இவர்களும் தான். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்டும் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து லியோ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘பேடேஸ்(Badass)’ பாடல் இன்று(செப்டம்பர்28) மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது. இந்த லிரிக்கல் பாடலில் வரும் சில காட்சிகளை சில காட்சிகளை பார்க்கும் பொழுது படத்தில பெரிய பெரிய சம்பவங்கள் இருக்கும் என்பது தெரிகின்றது.

லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் ‘பொழக்கட்டும் பற’, விக்ரம் திரைப்படத்தில் ‘போர் கண்ட சிங்கம்’, இதற்கு முன்னர் வெளியான லியோ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ ஆகிய பாடல்களை எழுதியுள்ளார்.

ஏற்கனவே லியோ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி’ பாடல் தற்பொழுது வரை உலகம் முழுவதும் விரல் ஆகி வரும் நிலையில் தற்பொழுது லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Previous article200 வழக்குகள் உள்ள ரவுடிக்கு பொறுப்பு வழங்கிய பாஜக!!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!!
Next article5 தேசிய விருது வென்ற சிவாஜி படத்தை கலாய்த்து தள்ளிய நடிகர் – அவர் யார்ன்னு தெரியுமா?