சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரயங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது!

Photo of author

By CineDesk

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரயங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் விரயங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது. இன்றைக்கு உங்களுக்கு செலவு கன்னாபின்னான்னு வரப்போகிறது ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.

குடும்ப உறுப்பினர்களே சிறுசிறு பிரச்சனைகள் வரக்கூடும். ஆகையால் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவியே கொஞ்சம் பிரச்சனை உள்ளது ஆகையால் கொஞ்சம் அனுசரித்து போவது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் அவச்சொல் வரலாம் என்பதால் கூடுமானவரை மேல் அதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரிச்சு செல்வது நலமாக அமையும்.

தொழில் வியாபாரத்தில் கவனம் வேண்டும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக இருப்பது நல்லது எந்த ஒரு விஷயத்திலும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு மன குழப்பம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எதிர்பாக்காத விசேஷங்களில் கலந்து மகிழ்ச்சி பெறுவார்கள்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எதிர்பாராத வெளியூர் பயணத்தில் மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எதிர்பாராத இனிப்பான செய்திகள் வந்து சேர்வதால் மனமகிழ்ச்சி அடைவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிறம் ஆடையை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.