நவம்பர் 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழா! பணியாற்றிய அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

0
199
#image_title

நவம்பர் 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழா! பணியாற்றிய அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

நவம்பர் 1ம் தேதி லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிறப்பு பரிசாக சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்கும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இதில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, பிக்பாஸ் ஜனணி, அனுராக் கஷ்யப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லியோ திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடுவதற்கும், லியோ திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சர்ப்ரைஸ் பரிசு கொடுக்கவும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் என்று காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தது. இதையடுத்து லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நடத்த அனுமதி கெடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் காவல்துறை கூறியிருந்தது. இதையடுத்து லியோ திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சர்ப்ரைஸ் பரிசு ஒன்று தருவதற்கு செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தங்க நாணயம் வழங்குவதற்கு செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி லியோ திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் லியோ என்று படத்தின் தலைப்பு அச்சிடப்பட்ட தங்க நாணயத்தை பரிசாக வழங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Previous articleகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பேட்டி!!
Next articleநெல்சனின் அடுத்த திரைப்படம்! கோலமாவு கோகிலா 2 எடுக்க திட்டம்!!