மேகதாது அணை கட்டியே தீருவோம்! பிரதமரை சந்தித்த பின் எடியூரப்பா! தமிழக நிலைமை?

Photo of author

By Kowsalya

மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக முதல்வர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
மேகதாது அணையால் மூன்று மாநிலங்கள் நீர் வளம் பாதிக்கப்படும் என்று தெரிந்ததும் கர்நாடக அரசு, பாஜக அரசு இதனை நிறைவேற்ற விடாப்படியாக உள்ளது.

இது சம்பந்தமாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். மாலை 6.30 மணிக்கு இருவரும் சந்தித்து ஆலோசனை செய்தனர். அரை மணி நேரமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது.அந்த ஆலோசனையில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மற்ற கர்நாடகக் கொரோனா நிலவரம் பற்றியும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

பின் முதல்வரை சந்தித்த எடியூரப்பா பேட்டி அளித்தார், அதில், எனது கோரிக்கைக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்றும் கூறினார். இன்று மீண்டும் பெங்களூரு ஒரு புறப்படுகிறேன் என்று சொல்லி உள்ளார்.

பத்திரிகை நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, மேகதாது அணை கட்டியே தீருவோம். காவிரியில் அணை கட்டுவது கர்நாடகாவின் உரிமை. அதை எந்த மாநிலங்கள் எதிர்த்தாலும் அதை பற்றி கர்நாடகா கவலைப்படாது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஆரம்பம் முதலே தமிழகம் கேரளா புதுச்சேரி மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மற்ற மாநிலங்களின் எதிர்ப்பை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் கர்நாடகாவுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். சுமூகமாக போகலாம் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியும் அவர் ஒத்து வரவில்லை, என்று கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தமிழகத்தின் நீர் வளங்களை மிக மோசமாக பாதிக்கும் என தெரிந்தும் இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று மக்கள் சொல்லி வருகின்றனர்.