பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி., 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி!! புதிய ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன?!

0
125

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக பயங்கரமாக பரவி வந்தது. இந்த நிலையில், பல மாநிலங்களுக்கு ஊரடங்குகள் போடப்பட்டது. மேலும், தமிழ் நாட்டில் முன்பே போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் நடந்து முடிய உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31 ஆம் தேதி வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 19.7.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் ஊரடங்கு மீண்டும் ஜூலை 31.7.2021 காலை 6 மணி வரை தொடர்கிறது. மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து தடை தொடரும். மேலும், திரையரங்குகள் மற்றும் அனைத்து மத கூட்டங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடரும். போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தடை தொடரும். இறுதிச் சடங்குகளுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நோயை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் முன்பே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். தொழில் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனத்தில் 50 சதவிகித மாணவர்களுடன் சுழற்சி முறையில் நடைபெறும்.

அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூட கூடிய இடங்களில் பின்வரும் முக்கிய நிலையான வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவையாவன,
கடைகளில் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்பட வேண்டும். மேலும், உடல் வெப்பநிலை பரிசோதனை கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். அதிகப்படியான நபர்களை கடைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது. மேலும், கடைகளில் பொது மக்கள் காத்திருக்கும் வரிசையில் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும்.

நோய் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறிதல் மற்றும் தொற்று உள்ளவர்கள் உடன் தொடர்பில் இருப்பவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல். மேலும், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழிமுறையாகும். மேலும், கொரனோ வைரஸ் நோய்த்தொற்று தடுப்பதற்கு நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நிலையான வழிகாட்டு முறைகள் படி, நோய் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். மேலும், பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வருவது மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவை முழுவதுமாக அழிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

author avatar
Jayachithra