துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மணமகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் சந்தோஷத்தை கண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக உள்ளது.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக அருமையான வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்பட்டு மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில மகிழ்ச்சிகரமான சந்தோஷங்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.
மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.