துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தெய்வ வழிபாட்டால் அமைதி காணும் நாள்!!

0
292
#image_title

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தெய்வ வழிபாட்டால் அமைதி காணும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தெய்வ வழிபாட்டால் அமைதி காணும் நாள். இன்றைக்கு ராசிக்கு உள்ளே சந்திர பகவான் இருப்பதால் எல்லா வேலைகளையும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் கால தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அரசியலில் இருக்கும் நண்பர்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது அவசியம். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் சில அலைச்சல்கள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு அசதிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் தனி கவனத்துடன் படிக்க வேண்டும். மூத்த வயது சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது உசிதம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் ஆன்மீக எண்ணங்களால் சில நன்மைகளை பெறுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்! 
Next articleவிருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள்!!