ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்! 

0
187
#image_title

ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்! 

நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பலப்படுத்தும் மிகவும் சுவையான ஒரு அற்புதமான பொடியை பற்றி பார்ப்போம்.

* ஒரு கட்டு முருங்கைக் கீரையை சுத்தம் செய்து பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு அலசவும். பின்னர் ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீர் முழுவதும் போனதும் ஒரு காட்டன் துணியை விரித்து அதில் ஈரம் போகும் அளவு கீரையை உலர்த்த வேண்டும். பேன் காற்றில் ஒரு மணி நேரம் உலர்த்தினால் போதும்.

* முருங்கைக்கீரை நன்கு ஈரம் போக உலர்ந்ததும் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். பின்னர் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, 2  டேபிள்ஸ்பூன் வேர்கடலை போடவும்.

*பருப்பு வகைகளை நன்கு சிவக்க வறுத்ததும்  பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும். அடுத்து 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகள், 8- 10 வர மிளகாய், சுவைக்காக ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து நன்கு வறுக்கவும். பருப்பு வகைகள் மற்றும் மிளகாய் என அனைத்தும் நன்கு சிவக்க வறுக்கவும். அடுத்து இதில் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுக்கவும்.

* லேசான புளிப்பு சுவைக்காக சிறிய துண்டு புளியை சேர்த்து நன்கு வறுக்கவும். அனைத்தும் நன்றாக வறுபட்டதும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

* அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் ஆயில் விட்டு கழுவி உலர்த்திய முருங்கைக் கீரையை போட்டு வதக்கவும். கீரையில் துளி ஈரப்பதம் கூட இருக்கக் கூடாது. இருந்தால் பொடி கெட்டுவிடும்.

* மிதமான தீயில் வைத்து 5- 7 நிமிடங்கள் கீரையை நன்றாக வறுக்கவும். கீரை நன்கு வறுபட்டு சற்று மொறுமொறுப்பாக மாறும். நிறம் மாறி நன்கு வறுபட்டதும் இதையும் எடுத்து தனியாக வைக்கவும்.

* ஒரு மிக்ஸி ஜாரினை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பருப்பு வகைகளை போட்டு நன்கு கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் அதிலேயே கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை டீஸ்பூன் உப்பு மற்றும் வறுத்து வைத்த முருங்கைக்கீரை ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

நைசாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. சற்று கொரகொரப்பாக இருந்தாலும் பரவாயில்லை. இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டு பின்னர் காற்று போகாத பாட்டிலில் சேமித்து வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே ஒரு மாதம் வரை இது தாங்கும்.

இதை சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம். இட்லி தோசைக்கு இட்லி பொடியாகவும் உபயோகப்படுத்தலாம். ஏராளமான நன்மைகளை அள்ளித் தரக்கூடிய பலவகை பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய சத்தான பொடி இது.