கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

Photo of author

By Divya

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

Divya

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் வாழக்கை சூழல் அவ்வாறு அமைவதில்லை. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மீண்டும் கடன் வாங்கி கடனில் மூழ்கி விடுகின்றோம்.

இந்த கடன் பிரச்சனை தீர ஆன்மீகத்தில் வழி இருக்கின்றது. பஞ்சமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை முழுமையாக அகலும்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்..

*பித்தளை தட்டு
*பச்சைப்பயறு
*நெய்
*அகல்
*திரி

பஞ்சமி திதியன்று வீட்டு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பூஜை அறையில் ஒரு பித்தளை தட்டு வைத்து அதில் பச்சைப்பயறை கொட்டி வைக்கவும்.

அடுத்து இரண்டு அகல் எடுத்துக் கொள்ளவும். அதில் பசு நெய் ஊற்றி திரி போட்டு பச்சைப்பயறு மேல் வைத்து தீபம் ஏற்றவும்.

கடன் பிரச்சனை நீங்கி செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

மறுநாள் காலையில் பித்தளை தட்டில் உள்ள பச்சைப்பயறை பறவைகளுக்கு உணவாக அளித்து விட்டு திரும்பவும் அதே பித்தளை தட்டில் பச்சைப்பயறு நிரப்பி நெய் தீபம் ஏற்றவும்.

இவ்வாறு தொடர்ச்சியாக 9 தினங்களுக்கு செய்து வந்தால் நிச்சயம் கடன் அகன்று பண வரவு அதிகரிக்கும்.