SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

Photo of author

By Kowsalya

ஆதார் எண்ணையும் பான் கார்டையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு ஜூன் 30-ஆம் தேதி தான் கடைசி தேதி என எச்சரித்திருந்தது.

இந்த மாதத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசானது தனது பான் நம்பரையும் ஆதார் எண்ணையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது.

இதற்குமுன் மார்ச் 31ஆம் தேதி கடைசி தேதி என அரசு அறிவித்திருந்த நிலையில் கொரோனாவில் தாக்கத்தால் தேதிகள் தள்ளிவைக்கப்பட்டு ஜூன் 30-ஆம் தேதி கடைசி தேதி என அறிவித்தது.

கொரோனா தொற்று அதிகமாக பரவி இருந்த காரணத்தால் வரி செலுத்துவோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடைசி தேதியை நீட்டித்தது.

ஜூன் 30-ஆம் தேதி யின் காலக்கெடுவில் நெருங்கி வருவதோடு தேதியை ஒத்தி வைப்பதாக அரசாங்கம் இன்னும் எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை என்பதால் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு சொல்லியுள்ளது. இதற்கு மூன்று வழிகள் உள்ளன.

1. SMS மூலம் இணைக்கலாம்.
2. அதிகாரப்பூர்வமான இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar 

1. SMS வழியாக:

அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலம் தங்களது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைக்க முடியவில்லை எனில் ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு செய்த மொபைல் எண்ணின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதால் இணைக்க முடியும்.

567678 or 56161 என்ற எண்ணிற்கு UIDPAN ( 12 இலக்க ஆதார் எண்) (10 இலக்க பான் கார்டு நம்பர்) டைப் செய்து உங்கள் ஆதார் எண் ணில் இருக்கும் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பினால் இரண்டு நிமிடத்தில் உங்கள் ஆதார் எண் மற்றும் பான் கார்டு இணைத்து விடும்.

2. வலைத்தள வழியாக:

1. Https://incometaxindiafilling.gov.in இந்த வலைத்தளத்தில் உள்நுழையவும்.
2. அது இடதுபுறம் Link aadhar என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
3. அதில் உங்களது பான் கார்டு நம்பர் ஆதார் கார்டு நம்பர் மற்றும் உங்களது ஆதார் கார்டில் என்ன பெயர் உள்ளதோ அதை அப்படியே உள்ளிடவும். பின் கீழே ஸ்கொயர் பாக்ஸ் என்று இருக்கும் அதை டிக் செய்து கொள்ளவும்.
4. பின் கீழே உள்ள captcha code அப்படியே டைப் செய்யவும்.
5. இப்பொழுது link Adhar என்ற பட்டனை கிளிக் செய்யவும். உடனே உங்களது ஆதார் கானுடன் இணைந்து விடும்.