கல்லீரலை பாதுகாக்கும் “அரைக்கீரை” குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

0
60
liver-protecting-semi-spinach-broth-how-to-make-it-delicious
liver-protecting-semi-spinach-broth-how-to-make-it-delicious

கல்லீரலை பாதுகாக்கும் “அரைக்கீரை” குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

வாரத்தில் 3 வேளை கீரையை உணவாக எடுத்து கொள்வது மிகவும் முக்கியம்.உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கீரையை உணவாக எடுத்துக் கொள்வது கட்டாயமாகும்.

கீரைகளில் பாலக் கீரை,சிறு கீரை,கடுகு கீரை,வெந்தய கீரை,வல்லாரை என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்றான அரைக்கீரையை வைத்தது குழம்பு அல்லது கடையல் செய்து சாப்பிட்டால் கல்லீரல் தொடர்பான பாதிப்பு குணமாகி அந்த உறுப்பு பாதுகாக்கப்படும்.

இந்த அரைக்கீரையில் அதிகளவு இரும்புச் சத்து,பாஸ்பரஸ்,வைட்டமின்கள்,கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*அரைக்கீரை – 1 கட்டு

*கடுகு – 1 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – தேவையான அளவு

*சின்ன வெங்காயம் -15(நறுக்கியது)

*கறிவேப்பிலை – 2 கொத்து

*உப்பு – தேவையான அளவு

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 4

*நாட்டு தக்காளி – 4

*பூண்டு – 5 பற்கள்

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் 4 நாட்டு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு சுத்தம் செய்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அடுத்து 15 சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரைக்கீரை,பச்சை மிளகாய்,5 பூண்டு பற்கள்,நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.

பின்னர் கீரை கலவை நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.ஒரு மத்து வைத்து நன்கு கடையவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கடுகு,1 தேக்கரண்டி உளுந்து பருப்பு,2 கொத்து கருவேப்பிலை,1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து தாளித்த பொருட்களை மசித்து வைத்துள்ள கீரையில் சேர்த்து கலந்து விடவும்.