தமிழகத்தில் கடன் தள்ளுபடி பெண்களுக்கு உதவி தொகை என்று பல்வேறு சமூகநீதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆரம்பமானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக் இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது இதன் மூலமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
இதே போல திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை மாதம் தோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்று வரையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கல்கள் காரணமாக, இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்த உரிமை தொகை ஏழ்மையான குடும்ப தலைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் நிதிநிலைமை கடந்த ஒரு வருட காலமாகவே சரியில்லை இதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. தமிழகத்தின் நிதி நிலைமை மெல்ல, மெல்ல சரி செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
மக்களுக்கு கண்டிப்பாக மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் இதில் மாற்றம் இருக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான், இன்னொரு பக்கம் சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி மிக விரைவில் நிறைவேற்றப்படும் என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார், இதற்கான பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.
சுய உதவி குழுவினருக்கு 75 கோடி ரூபாய் கடன் வரையில் இருக்கிறது. இந்த கடன் அப்படியே தள்ளுபடி செய்யப்படும் இதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்த பிறகு கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்த போது நிதிநிலைமை காரணமாக, இந்த கடனை தள்ளுபடி செய்யாமல் இருந்தனர். தற்போது நிதி நிலைமை சரி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே கடனை தள்ளுபடி செய்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டமும் மிக விரைவில் செயல்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.