கட்சிக்குள் பிரச்சனை இருந்தால் இதை செய்ய வேண்டுமே தவிர கொள்கையை மீறக் கூடாது! பாஜக மேல் இடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு!

0
55

பாஜகவின் நிர்வாகி திருச்சி சூர்யா மற்றொரு பாஜக நிர்வாகியான டெய்சி சரணை கடுமையாக தகாத வார்த்தைகளால் திட்டுவதைப் போல ஒரு வீடியோ வெளியானது. இந்த ஆடியோவிற்கு பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

அதோடு பாஜகவை சார்ந்தவர்களே தன்னை சமூக வலைதளத்தில் கடுமையாக சீண்டி வருவது தொடர்பாக காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்த நிலையில், அவருடைய தொடர்ச்சியான பாஜக தொடர்பான கருத்துக்கள் சர்ச்சையை உண்டாக்கினர். இதனைத் தொடர்ந்து அவரை 6 மாத காலம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்தார்.

பாஜகவை சார்ந்த ஓபிசி நலப்ரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் டெய்சி சரண் உள்ளிட்ட இருவருக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்ததற்கு எதிராக டைசி சரணிடம் திருச்சி சூர்யா கோபமாக மிகவும் கடுமையான, ஆபாசமான வார்த்தைகளால் பேசுவதாக அந்த ஆடியோ அமைந்திருக்கிறது.

இந்த ஆடியோ குறித்து வெளிநாட்டு மற்றும் வெளி மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பாஜகவை சார்ந்த காயத்ரி ரகுராம் வலைதள பதிவில் விமர்சனம் செய்திருந்தார். பெண்களை குறி வைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இப்படியான சமயங்களில் சொந்த கட்சி பெண்களை ஏன் தாக்க வேண்டும்?

இந்த ஹைனாக்குகளுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும் சில ஜால்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. அனைத்தையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள் என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் தான் காயத்ரி ரகுராமை 6 மாத காலம் இடைநீக்கம் செய்தும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் குறித்து பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை வழங்கவும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் வெளி மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாலும் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்று அண்ணாமலை உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அதேபோன்று அண்ணாமலை மற்றொரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். பாஜகவின் மாநில பொறுப்பில் இருக்கின்ற முக்கிய நிர்வாகிகள் அதிமுக கூட்டணி தொடர்பாகவும், எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாகவும் விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பாஜகவினர் யூடியூப் சேனல்களில் நேர்காணல் கொடுப்பதற்கும் கட்டுப்பாடு விதித்திருக்கிறார் அண்ணாமலை.

கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் youtube சேனல்களுக்கு நேர்காணல் வழங்கப்பட்டால் கட்சியின் மாநில ஊடகப் பிரிவின் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் அண்ணாமலை.

இந்த நிலையில் தான் தமிழகத்திற்கான பாஜக தேசிய இணை பொறுப்பாளர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி தமிழக பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் கண்ணியம், ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு உள்ளிட்டவற்றை நிலை நிறுத்துவதற்காக எல்லா பாஜக நிர்வாகிகள் மற்ற தலைவர்கள் ஊடகங்களில் பேசும்போதோ, சமூக ஊடகங்களில் பகிரங்க அறிக்கைகளில் வெளியிடும்போதோ கட்சி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

உள் விவகாரங்கள் ஏதாவது இருந்தால் அதனை மாநில தலைமை மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்று தேர்வு காண வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் ஆராய்ச்சி திட்டங்களை பிரச்சாரம் செய்து மக்களுடன் ஆழமான மற்றும் நேரடியான ஈடுபாட்டை கொண்டிருக்குமாறு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

எல்லோரும் அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டும். பொதுவாக மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கவும், குறிப்பாக ஆளும் திமுக அரசின் தவறான ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயல்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தவும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். பாஜகவில் அடுத்தடுத்து நடைபெற்ற சில பிரச்சனைகளால் தமிழக பாஜகவினருக்கு மேல் இடத்திலிருந்து எச்சரிக்கை வந்திருக்கிறது என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.