இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
236
Today is a holiday for schools and colleges! Action order issued by the District Collector!
Today is a holiday for schools and colleges! Action order issued by the District Collector!

இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த வாரம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.அதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதனை தொடர்ந்து கனமழை பெய்யும் நாட்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. சீர்காழி பகுதியில் கடந்த 122 வருடங்கள் இல்லாத அளவிற்கு ஆறு செ .மீ அளவிற்கு மழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது அந்த மழை நீர்களை சீர் அமைக்கும் பணிகள் முடிவடையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்திருந்தார்.

தற்போது தான் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது.இந்நிலையில்  மீண்டும் காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால் பல்வேறு இடங்களில்  கனமழை பெய்து வருகின்றது.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleமிக விரைவில் தள்ளுபடி செய்யப்படும் மகளிர் சுய உதவி குழு கடன்கள்! தயாராகிறது பட்டியல்!
Next articleஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு தேவை! வெளிவந்த புதிய உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here