கடந்த 2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்திட்டம் முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவம் நம் நாட்டின் மூச்சு அதில் ஈடுபட்டு உயிரிழந்தோ, ஊனமுற்றோ அல்லது ஓய்வு பெற்றோ இருக்கும் ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்தே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒரு கோடி வரை கடனுதவி வங்கிகளின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும்,மூன்று சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும். மேலும் இவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கு அரசின் சார்பாக திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். உயிரிழந்த ராணுவத்தினரின் குடும்பத்தாரும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. www.exwel.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாத ராணுவத்தினர் அல்லது ராணுவ குடும்பத்தினர் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான ராணுவ வீரர்களின் வாழ்க்கை இராணுவத்திற்கு பிறகும் மதிப்பு நிறைந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.