இடைத்தேர்தல் தோல்வி பயம்! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஸ்டாலின்

0
163

இடைத்தேர்தல் தோல்வி பயம்! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் கட்சி சாராத உள்ளூர் பிரமுகர்களும் உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, உச்சநீதிமன்றத்தின் கடுமையான விமர்சனம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடை வாங்க உச்சநீதிமன்றம் சென்றுள்ளது திமுக. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு மற்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகளை நிறைவு செய்த பின்னரே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என்றும் அதுவரையும் தேர்தல் தேதியை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளது திமுக.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்ற திமுகவும் அதன் கூட்டணியும் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண்பதற்கு தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. ஏனெனில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கொடுத்த கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி இந்தியாவிலேயே தமிழகம்தான் ஏமாந்தது,. மற்ற மாநிலங்கள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழகத்தில் ஊடகங்கள் அனைத்தும் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மோடி மற்றும் பிஜேபியின் எதிர்ப்பு என்ற மாயையை மக்களிடம் திணித்தனர். மக்களை சிந்திக்க விடாமல் செய்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை தோல்வி அடையச் செய்தனர்,. லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவும் காங்கிரசும் வெற்றி பெற்றது. அந்த அளவிற்கு மோடி எதிர்ப்பு மாயையை தமிழகத்திற்குள் கொண்டுவந்தது ஊடகங்கள்.

மோடியை எதிர்த்து வென்ற இந்தியாவிலேயே மிகச் சிறந்த தலைவர் என்று முக.ஸ்டாலினை சித்தரித்து தமிழக ஊடகங்கள் பெரிதாக கொண்டாடினர். காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாத காரணத்தால் திமுக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது,. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி களிப்பில் இருந்த திமுகவை அடுத்த இடைத்தேர்தலில் கதிகலங்க செய்துவிட்டது அதிமுக,பாமக,பாஜக,தேமுதிக கூட்டணி.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் சூறாவளியாக பிரச்சாரம் செய்தும் இடைத்தேர்தலில் அதிமுக கம்பீரமான வெற்றியை ருசித்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சிக்கு உள்ளானார். நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகள் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற மு.க.ஸ்டாலினுக்கு சங்கடமான நிலைக்கு தள்ளியது.

இடைத்தேர்தல் வெற்றி மூலம் அதிமுக உற்சாகமாக உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க உள்ளது, அதனுடன் பாமக,தேமுதிக,பாஜக போன்ற பிரதான கட்சிகளும் அதிமுக தலைமையில் போட்டியிடப் போவது உறுதியாகத் தெரிகிறது. கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கேட்டு நெருக்கடி கொடுக்கும் என்பதால் மறைமுக தேர்தலுக்கு ஆளுநர் மூலம் அவசர சட்டம் பிறப்பித்தது ஆளும் கட்சி,.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை சென்னை மேயராக வெற்றி பெற வைத்து தனது குடும்பத்தின் வாரிசு அரசியலை தனக்கு பின்பும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற என்னத்திற்கு ஆப்பு வைத்தது அதிமுக. மறைமுகத் தேர்தல் நடந்தால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவும் பல இடங்களில் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெறுவார்கள் என்று முக.ஸ்டாலின் நன்கு அறிந்து வைத்துள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடித்துக் கொண்டிருக்கும் திமுக,. உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால், மீண்டும் எழுந்திருக்க முடியாது என்று உடன்பிறப்புகள் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மு.க ஸ்டாலின் ஆங்காங்கே பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்,. திமுக ஆட்சிக்கு வந்தால் தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று, மக்களின் எண்ண ஓட்டங்களில் நிலை நிறுத்திக் கொண்டால் ஆட்சி அதிகாரத்திற்கு வர உதவியாக இருக்கும் என்று மு.க ஸ்டாலின் கணக்கு,. இதன் காரணமாகவே அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது திமுக,.

நேற்று சென்னையில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை பெற்றது,. இதில் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது என்பது குறிப்பிடதக்கது. தமிழக மக்கள்தான் சந்திக்கணும் உள்ளாட்சித் தேர்தல் தடைக்கு யார் காரணம் என்று திமுகவா அதிமுகவா?

Previous articleவேற லெவல் படம்: என்னை நோக்கி பாயும் தோட்டாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்
Next articleசென்னை டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கிய பிரபல நடிகை!