மீண்டும் நீட்டிக்கப்படும் முழு ஊரடங்கு!அதிர்ச்சியில் மக்கள்!!

0
139

கேரளாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காரணத்தினால் ஏப்ரல் மாதம் முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மாதம் முதல் தொற்று விகிதம் படிப்படியாக குறைந்ததால் வார நாட்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பேருந்து, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் இன்றும்(10.7.2021), நாளையும்(11.7.2021) ஆன வார இறுதி நாட்களில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. உணவு விடுதிகளில் ஆன்லைன் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மருத்துவம், சுகாதாரம், பத்திரிகை வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

காலையில் 6 மணி முதல் 9 மணி வரை மளிகைக் கடைகள் மற்றும் பிற அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கலாம் என்ன உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் குறைவதை பொருத்தே அடுத்த வாரம் இறுதி நாட்களில் ஊரடங்கும் தரவுகளை அறிவிக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleசென்னை உட்பட 5 நகரங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவும் ஆபத்து!
Next article2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்!