பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !! 

0
245
Locked railway gate missing gate keeper !! What the public has done for a long time!!
Locked railway gate missing gate keeper !! What the public has done for a long time!!

பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !! 

ரயில்வே கேட்டினை பூட்டிவிட்டு சென்ற கேட் கீப்பர் நீண்ட நேரம் திறக்காததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

பரபரப்பான இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கே ரயில்வே கேட்டினை பூட்டிச் சென்ற கேட் கீப்பர் குறட்டை விட்டு தூங்கியதால் பொதுமக்கள் அவதிபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் அருகே ஒரு ரயில்வே  லெவல் கிராசிங் கேட் உள்ளது. இங்கு ஒரு கேட் கீப்பரும் உள்ளார். இந்த சூழ்நிலையில் ரயில் வரும் நேரம் என்பதால்  இந்த கேட்டினை பூட்டிவிட்டு கேட் கீப்பர் தனது அறையில் சென்று நன்றாக தூங்கியுள்ளார்.

ஆனால் ரயில் சென்று சுமார் 20 நிமிடங்கள் மேல் ஆகியும் கேட் கீப்பர் வந்து கேட்டினை திறக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் மிகுந்த கோபமுற்று கேட் கீப்பரின் அறைக்குச் சென்று அவரை எழுப்பி உள்ளனர். ஆனால் அவர் எழுந்துக் கொள்ளாமல் நன்றாக குறட்டை விட்டுத் தூங்கியுள்ளார்.

ரயில் போன பின்னரும் கேட்டினை திறக்காமல் தூங்கிய கேட் கீப்பர் ஆனந்தை இரண்டு பக்கமும் நீண்ட நிமிடங்கள் காத்திருந்த மக்கள் சரமாரியாக திட்டித் தீர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ரயில்வேதுறை அதிகாரிகள் இந்த கவனக்குறைவு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous article10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!
Next articleஅஜய் கிருஷ்ணாவின் சிறப்பான பந்துவீச்சு!! 12 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி!!