இன்டர்நெட்டில் Login செய்வதால் இப்படியும் நடக்குமா? உருவாகும் திரைப்படம்

0
180

இன்டர்நெட்டில் Login செய்வதால் இப்படியும் நடக்குமா? உருவாகும் திரைப்படம்

லாகின் செய்வதால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று டெக்னாலஜியை வைத்து லாகின் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். விரைவில் அந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜே.எப்.எல். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் தான் “லாகின்”. இந்த திரைப்படத்தில் ஹீரோக்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். ஹீரோயினாக ப்ரீத்தி நடிக்கிறார். விபின் இசையமைப்பாளர். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ராம் கிஷன் கதைக, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.

 

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் இரண்டு நண்பர்கள் அவர்களுக்கு தெரிந்த ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்களை வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்பி விடுகிறது. அந்த விளையாட்டு அவர்கள் வாழ்வில் விளையாட ஆரம்பிக்கின்றது. இந்த மாதிரியான விறுவிறுப்பான கதை களத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

 

இன்றைய இணையதள காலத்தில் எதிர்க்க எடுத்தாலும் லாகின் செய்ய சொல்கிறார்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட இன்டர்நெட்டில் லாகின் செய்து தவறான விஷயங்களுக்கும் லாகின் செய்து நாம் செய்யும் வேலைகளினால் எந்த மாதிரியான இயல்பு வாழ்க்கையில் பாதிக்கப்படுகிறோம் என்ற கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

 

படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் மற்றும் எடிட்டிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் நோ இல்லாத என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா பாடி இணையதளத்தை கலக்கி வருகிறது. திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.