லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!!
Indian National Developmental Inclusive Alliance
வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பிகார் மாநில பாட்னாவில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது.
India Alliance in Lok Sabha Election 2024:
இந்நிலையில் எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டமானது இன்று மும்பையில் தொடங்க இருக்கிறது.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ‘லோகோ’,தொகுதி பங்கீடு லோக்சபா தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.ஏற்கனவே 26 காட்சிகள் ஒன்று சேர்ந்து உருவான இந்தியா கூட்டணியில் மேலும் புதிதாக 2 காட்சிகள் சேர்ந்துள்ளது.
மேலும் இன்று மும்பையில் நடக்க இருக்கின்ற மூன்றாவது ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,சரத்பவார்,நிதிஷ் குமார், சோனியா காந்தி,ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இந்நிலையில் வருகின்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் அனைத்து அரசியல் காட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருவதால் தற்பொழுது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.