சிறப்பாக முடிந்த ஓணம் பண்டிகை!!  665 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை!!

0
32

சிறப்பாக முடிந்த ஓணம் பண்டிகை!!  665 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை!!

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை நடந்து முடிந்ததை அடுத்து மதுபானங்கள் 665 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கேரளா மாநிலத்தில் அனைத்து மக்களாலும் விமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஓணம் பண்டிகையும் ஒன்று ஆகும். ஓணம் பண்டிகையால் கேரளா மாநிலமே விழாக்கோலம் பூண்டது. கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி 10 நாட்களாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பத்தாவது நாளான ஆகஸ்ட் 29ம் தேதி மக்கள் வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் விருந்து வைத்து வழிபாடு நடத்தி ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இதையடுத்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களில் மதுபானங்கள் அதிகளவு விற்பனை ஆகியுள்ளது.

கேரளா மாநிலத்தில் அரசு மதுபான விற்பனை கழகம் சார்பில் மதுபான விற்பனை நடைபெற்று வருகின்றது. கேரளா மாநிலம் முழுவதும் 320க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் உள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்ட ஓட்டல் பார்களில் உள்நாட்டு மதுபானங்களும், வெளிநாட்டு மதுபானங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சில்லறை கடைகள் மற்றும் ஓட்டல் பார்களில் அதிகளவு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.

ஓணம் பண்டிகை தொடங்கிய ஆகஸ்ட் 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரையிலான 9 நாட்களில் 665 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இதே போல் 624 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 41 கோடி ரூபாய் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது.

ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 28ம் தேதி மட்டும் 116 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி சங்கனாச்சேரி என்ற பகுதியில் உள்ள ஒரு கடையில் 95.78 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. அதே போல சேர்தலா என்ற பகுதியில் உள்ள ஒரு கடையில் 93.76 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. பையனூர் என்ற பகுதியில் உள்ள ஒரு கடையில் 91.67 கோடி ரூபாய்க்கும் சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் 88.59 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.